தமிழகத்தின் நிழல் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… மாஜி அமைச்சர் விமர்சனம்  

தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் நிழல் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… மாஜி அமைச்சர் விமர்சனம்   

தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கிண்டி ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பன்வாரிலாலுக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.

தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி திமுக வாக்குறுதி அளித்ததாகவும் நீட்டுக்கு விலக்கு பெற அதிமுக ஆட்சியில் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மாணவர் சமுதாயத்தை திமுக ஏமாற்றியுள்ளதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமார் திமுக அளித்த வாக்குறுதியை நம்பி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகவில்லை என்றார். அதிமுக ஆட்சியில் இருந்த சட்டத்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள் தான் இப்போதும் இருப்பதாகவும் அவர்கள் தான் அப்போதும் நீட்டுக்கு எதிரான சட்ட முன்வடிவை தயாரித்தார்கள் எனக்கூறிய ஜெயக்குமார் தற்போது நீட்டிலிருந்து விலக்கு பெற்று விட முடியுமா என்றார்.

உதயநிதி ஸ்டாலினை உதார்நிதி விமர்சித்த ஜெயக்குமார் நீட்டுக்கு எதிராக அன்றைக்கு அவ்வளவு  பேசிய உதயநிதி இன்று எங்கே போனார் என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகளுக்கு திமுகவே பொறுப்பு எனவும் தயவு செய்து மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகவுள்ளதாக கூறிய ஜெயக்குமார் ஆலோசனை கூட்டத்தின் போது உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது குறித்து பேசவில்லை எனவும் ஆனால் தற்போது இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது முறைகேடுக்கு வழி வகுக்கும் எனவும் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்தார்.