"உதயநிதி பேச்சு ஒரு சந்தர்ப்பவாதம்;  திமுக ஏமாற்று வித்தைக்காரர்கள்” - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

"உதயநிதி பேச்சு ஒரு சந்தர்ப்பவாதம்;  திமுக ஏமாற்று வித்தைக்காரர்கள்”  - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

நிலவில் சந்திராயன் 3  தடம்பதித்து உலக அளவில் இந்தியா சாதனை படைத்தது போன்று, அதிமுக எழுச்சி மாநாடு உலக தமிழர்களிடையே பேசப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில்  எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் விருது வழங்கிய மதுரை மக்களுக்கு நன்றியை செலுத்தும் வண்ணம் மதுரை  வலையங்குளம் கருப்பசாமி கோவில் சிறப்பு வழிபாடு செய்து திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் வழிபட்டார்.

 பொதுமக்களுக்கு மாநாட்டு திடலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அன்னதானம் வழங்கினார். இந்த அன்னதான நிகழ்வை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்; அப்போது 

திமுக அமைச்சர்கள் இந்த மாநாடு கேலிக்கூத்தாக இருந்தது என்று கூறியது குறித்த கேள்விக்கு:-

நாங்கள் எதிர்க்கட்சி, திமுக ஆளுங்கட்சி நாங்கள் என்ன சாதனை செய்தாலும் அதை குறையாக கூறுவது தான் அவர்கள் வாடிக்கை,.. நாங்கள் உண்மையை சொன்னாலும், சத்தியத்தை சொன்னாலும், தர்மத்தை சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மக்கள் என்ன சொன்னார்கள் என்று தான் பார்க்க வேண்டும். தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லோரும் பாராட்டுவது போல் இந்த மாநாடு வரலாற்று திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்று அனைவரும் கூறுகின்றனர். அதிமுக மாநாடு இந்தியா அளவில் அதிர்வலையும் ஏற்படுத்தி உள்ளது. அதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை”, என்று பதிலளித்தார். 

” நிலவில் சந்திராயன் 3  தடம்பதித்து உலகம் முழுவதும் இந்தியாவின் சாதனையை வரலாறு பேசுகிறது. அதேபோல், அதிமுக மாநாடு உலக அளவில் உள்ள தமிழர்களின் மத்தியில் பேசப்படுகிறது. இதுதான் உண்மை சத்தியம்”,  என்றார். 

அதிமுக உதவியுடன் தான் பாஜக தமிழகத்தில் காலடி எடுத்து வைத்து வருகிறது என உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு:-

இதை சொல்வதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன அருகதை இருக்கிறது? பிஜேபி கூட்டணியில் திமுக இருந்தபோது முக்கியமான துறையை முரசொலி மாறனுக்கு பெற்றுத்தந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி, முரசொலி மாறன் சுயநினைவை இழந்த போது கூட, அவர் சுடுகாடு செல்லும் வரை பாஜக கூட்டணியில் அமைச்சர் பதவியை அனுபவித்தவர் முரசொலி மாறன். 

முரசொலி மாறன் அடக்கம் செய்த பிறகு வாஜ்பாய் டெல்லி செல்லும் பொழுது தான் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

 உதயநிதி ஸ்டாலின் பேசுவது சந்தர்ப்பவாத பேச்சு, அவர்கள் பிஜேபியுடன்  கூட்டணி வைக்காமல், அவர்களுக்காக வாக்கு கேட்காமல் இருந்திருந்தால், இது போன்ற கருத்துக்களை சொல்லும்போது அவர்கள் சொல்வதில் ஏதோ நியாயம் இருக்கிறது என்று மக்கள் நினைப்பார்கள்.

ஆனால் திமுகவினர் அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பது போல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதிகார பகிர்விலே, அமைச்சரவையிலே எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு, இன்று அவர்கள் சொன்னால் அதை  மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதுவும் உதயநிதி ஸ்டாலின் வாயில் வந்ததை எல்லாம் உளறுகிறார். பிஜேபியுடன், அதிமுக  இருக்கும் வரை அவரது தாத்தா கோட்டைக்கு போக முடியவில்லை, அதேபோல் அம்மா இருந்தவரை ஸ்டாலின் முதல்வராக ஆக வரமுடியவில்லை, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆன்மா வழியில் எடப்பாடியார்  மக்கள் செல்வாக்குடன் ,மக்கள் வரவேற்புடன் மாபெரும் புரட்சியை எழுச்சி மாநாட்டை நடத்தி உள்ளார்.

 திமுக ஏமாற்று வித்தைக்காரர்கள் நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து என மக்களை ஏமாற்றியும், 520 தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றவர்களுக்கு மக்கள் வரும் தேர்தலில் வரும் தேர்தலில் தக்க பாடம் கொடுப்பார்கள்”  என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க   | கேரளாவிலும் தடம் பதிக்கும் திமுக!