"விற்பனையாகாத சுமார் 4 ஆயிரம் வீடுகள், வாடகைக்கு விடப்படும்" அமைச்சர் முத்துச்சாமி!!

வீட்டுவசதி வாரியத்தில் சுமாா் 4 ஆயிரம் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளதாக அமைச்சா் முத்துச்சாமி தொிவித்துள்ளாா். 

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த பேரறிஞர் அண்ணாவின் சிலையை புதுபிக்கும் பணி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. 

இதனையடுத்து, அண்ணாவின் 115 பிறந்த நாளையொட்டி , அமர்ந்த நிலையில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவ சிலையின் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காணெளி காட்சி வாயிலாக பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் இரண்டு கட்டமாக ஆய்வு செய்து, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஏதேனும் விண்ணப்பங்கள் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதனை மேல்முறையீடு செய்தால் உரிர நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

வீட்டுவசதி வாரியத்தின் மூலம் விற்கப்படும் வீடுகளில் சுமார் 4 ஆயிரம் வீடுகள் விற்பனையாகமல் உள்ளதாகவும், அதனை வாடகை குடியிருப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

தமிழகத்தில் சட்ட விரோதமான பார்கள் செயல்பட வில்லை என்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி பார்களை வெளிப்படையான ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகளை துறை அதிகாரிகள் எடுத்து வருவதாகவும் கூறினார். 

அரசு மதுபான கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக எந்த நேரத்தில் புகார் வந்தாலும் உடனடியாக அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க || டிஜிட்டல் முறையில் ஓவியங்கள்...டிஜிட்டல் டிரீம்ஸ் கலை கண்காட்சி!!