தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்.. சென்னையில் 1600 இடங்களில்!!

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 27வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கொரோனாவை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்.. சென்னையில் 1600 இடங்களில்!!

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் அதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்த வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்நிலையில்  இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 27 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.  

தமிழகத்தில் இதுவரை 10 கோடியே 17 லட்சத்து 30 ஆயிரத்து 611 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1 கோடியே 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 49 லட்சத்து 85 ஆயிரத்து 599 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.