வேளாங்கண்ணி பேராலயம்..!குறுத்தோலை பவனி விழா..!

வேளாங்கண்ணி பேராலயம்..!குறுத்தோலை பவனி விழா..!

வேளாங்கண்ணி போராளயத்தில் குருத்தோலை பவனி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றுப் பாடல்கள் பாடியபடி பவனி வந்தனர்.

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் இயேசு கிறிஸ்துவின்  40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில் ஆண்டு  தோறும் 40 நாட்கள் தவக்காலம் மேற்கொள்வதைக் கிறித்துவர்கள் வழக்கமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

அதே போல் இந்த ஆண்டுக்கான குருத்தோலை பவனி திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக தொடங்கியது.

இதனை அடுத்து ஆயிரக்கணக்கான  கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தியபடியும் , பாடல்களைப் பாடியும் ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர், வேளாங்கண்ணி தூய  ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றது. ஏற்கனவே ஈஸ்டர் திருவிழா சிறப்பு வழிபாடுகள் பிப்ரவரி 17-ஆம் தேதி  துவங்கிய நிலையில் குருத்தோலை பவனி விழாவுக்கான சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று. பேராலயத்தின் முகப்பில் துவங்கிய பவனியாகச் சென்றவர்கள்  வீதிகள் வழியாகச் சென்று கலையரங்கில் நிறைவு செய்தனர். இந்த விழாவின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றுப் பாடல்களை பாடியபடி பவனி வந்தனர்.

 இதையும் படிக்க :சமூக ஆர்வலருக்கு மிரட்டல் விடுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர்...!