ரேஷன்  கடைகளில் பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன்  கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும் அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ரேஷன்  கடைகளில் பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை மேலாளர்களுக்கும்  ஒரு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலமாக விரல் கைரேகை பெற்று அதன் மூலமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் நேரடியாக வந்து பொருட்களை வாங்க முடியாத பட்சத்தில் மாற்றாக வேறொருவர் வந்து வாங்குவதற்கு அத்தாட்சி கடிதம் வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தை காண்பித்து அவர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது,

ஒருசில ரேஷன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார்கள் வருவதாக தெரிகிறது என்றும் இனிவரும் காலங்களில் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார் வந்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மீதும் அதிகாரிகள் மீதும்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.