டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு!

டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு!

மேட்டூர்: மேட்டுர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை காலை தண்ணீர் திறக்கப்படவிருக்கிறது

90 ஆவது ஆண்டாக மேட்டுர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை காலை தண்ணீர் திறக்கப்படவிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக, தண்ணீர் திறந்து விடுகிறார். 

துவக்கத்தில், வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக திறக்கப்படும் நீரின் அளவு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, மாலை 4 மணியளவில் 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் சிலர் பங்கேற்கின்றனர். 

இதற்காக, நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு அப்பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.