குற்றாலம் அருவியில் நீர் வரத்து குறைவு... ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலா பணிகள்..!

குற்றால அருவி மற்றும் சோத்துப்பாறை அணையில் நீர் வரத்து வெகுவாக குறைந்ததால்,  சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனா். 

குற்றாலம் அருவியில் நீர் வரத்து குறைவு... ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலா பணிகள்..!

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இயற்கை சூழலுடன் அமைந்துள்ள குற்றால அருவியில், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். ஆனால், தற்போது ஜூன் மாதம் துவங்கிய நிலையிலும், மழை பெய்யாததால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும், நீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது. அருவியில் குளித்து மகிழலாம் என்று ஆசையுடன் வந்த சுற்றுலா பயணிகள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அதேபோல், தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பறை அணையில், கடந்த ஆண்டு கோடை மழையால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், இந்த ஆண்டு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், பாசனத்திற்கு நீர் திறக்கும் தேதியில் தாமதம் ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.