நமக்கு சோறுதான் முக்கியம்... கொரோனாவை மறந்த மக்கள்...

சிந்தாதரிபேட்டை மீன் சந்தையில்    சில்லறை விற்பனைக்கு மீன்கள் வாங்க அமோக மக்கள் கூட்டம் கூடியதால் காவல்துறை தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.

நமக்கு சோறுதான் முக்கியம்... கொரோனாவை மறந்த மக்கள்...
கடந்த வாரம் முதல் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வில்  மீன் விற்பனை செய்யும் விற்பனை கூடங்களில் மொத்தமாக மற்றும் சில்லறை விற்பனை செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 
 
அதில் சென்னையை பொறுத்தவரை காசிமேடு, பட்டினம்பாக்கம் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில்  நடமாடும் வியாபாரிகள்  மொத்தமாகவே மீன்களை வாங்கி சில்லறை வியாபாரம் செய்து கொள்ளலாம்.
 
அந்த வகையில் இன்று  காலை 6 மணி முதலே பெரும்பாலான பொதுமக்கள் சிந்ததரிபேட்டை மீன் சந்தையில் மீன்களை  வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசு அனுமதித்த விதிமுறைகள் முறையாக பின்பற்றிட காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் மீன் சந்தையில் பெரும்பாலான பொதுமக்கள் கூட்டமாக காணப்படும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
குறிப்பாக இங்கு 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். அதில் ஒரு சிலர்  முக கவசம்  அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் மக்கள் கூட்டமாக  கூடுவது தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மீன் பிடி தடை காலம் முடிந்தும் மீன்களின் வரத்து இன்னும் குறைவாக இருப்பதால் மீன்களின் விலை அதிகரித்தும் காணப்படுகிறது. காவல்துறையினர் அங்கு வந்த அவர்களுக்கு அறிவுரை கூறியும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன் வாங்கி செல்கின்றனர்.