வேலுமணி ஊழல் பண்ணாரா இல்லையான்னு நாங்க முடிவு பன்றோம்...  லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிக்கைக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுளீர்

வேலுமணி ஊழல் பண்ணாரா இல்லையான்னு நாங்க முடிவு பன்றோம்...  லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிக்கைக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுளீர்

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர்கள் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தரப் பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி லஞ்ச ஒழிப்பு காவல்துறை சார் பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து வழக்கை முடித்து வைத்தது. 

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் அறிக்கைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார் பில் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்ட வழக்கின் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது எஸ். பி.வேலுமணி தரப் பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை இந்த வழக்கை முடித்து வைத்ததாக வாதாடினார். 

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் புகாரை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை தாக்கல் செய்த அறிக்கைக்கு மனுதாரர்கள் தரப் பில் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த புகாரை முந்தைய அரசுதான் முடித்து வைத்தது. நீதிமன்றம் முடித்து வைக்கவில்லை.

கடந்த ஆட்சியின்போது பகலை இரவாக்கி, இரவை பகலாக்கி லஞ்சஒழிப்பு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்திருந்தால் அதை ஏற்க முடியாது. அறிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும் என்று சொல்லி இந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.