பாதிப்பு குறித்து விரிவான ஆய்வுக்கு பிறகு அறிக்கை சமர்பிக்கப்படும்...உள்துறை இணை செயலர் ராஜீவ் சர்மா...

வெள்ள சேத பாதிப்புகள் குறித்து முழுமையான ஆய்வுக்கு பிறகு மத்திய அரசிடம் தங்களின் அறிக்கையை சமர்ப்பிப்போம் என மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தெரிவித்துள்ளார்...

பாதிப்பு குறித்து விரிவான ஆய்வுக்கு பிறகு அறிக்கை சமர்பிக்கப்படும்...உள்துறை இணை செயலர் ராஜீவ் சர்மா...

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையால், பல மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. 

இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழுவினர், சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  சென்னை மழை பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை   பார்வையிட்டனர் . பின்னர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிளுடன் ஆலோசனை கூட்டமானது சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையர்கள், அனைத்து துறைகளின் தலைமை பொறியாளர்கள்  பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா கூறுகையில், இன்று முதல் தங்களுடைய ஆய்வு பணியை தொடங்கியுள்ளதாகவும் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், விரிவான ஆய்வுக்கு பிறகு மத்திய அரசிடம் தங்களின் அறிக்கையை சமர்ப்பிப்போம் என்றும் அவர் தெரிவித்தார் .மேலும் அறிக்கையை  சமர்ப்பிக்க கூடிய தேதி ஆய்வினை முடித்த பிறகு முடிவு செய்வோம் என்றும் கூறினார்..