600 மாணவர்களின் நிலமை என்னவாகும்?

விக்டோரியா கல்லூரி விடுதியே கொரானா வார்டாக மாற்ற திட்டமிட்டடுள்ள தமிழக அரசு , தங்கியிருக்கு 600 விடுதி மாணவர்களின் நிலை ?

600 மாணவர்களின் நிலமை என்னவாகும்?

தமிழகத்தில் கொரானா உருமாறி ஓமிக்ரான் பரவலாக மாறிவரும் நிலையில்  தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் வெள்ளி , சனி, ஞாயிறு கோவில்களுக்கு அனுமதி மறுப்பு , கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு போன்ற கட்டுபாடுகளை அறிவித்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்சமயம் அதிகமான நோயாளிகளுக்கான படுக்கைகளை தயார் செய்து வருகிறது தமிழக அரசு.

கடந்த சில மாதங்களாக கல்லூரிகளும் பள்ளிகளும்  திறக்கப்பட்டு செயல் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் எனவும் வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கல்லூரிக்கு வந்தால் போதுமானது என கூறப்பட்டது. இந்த நிலையில் பலகல்லூரிகளின் வளாகங்கள் கொரானா வார்டாக மாற்றப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள் விக்டோரியா கல்லூரி விடுதியும் கொரானா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கல்லூரியில் தங்கி பயிலக்கூடிய முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் 600 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இருந்த நிலையில் இவர்களுக்கு மாற்று ஏற்பாடு பற்றி எதையுமே அறிவிக்காமல் மாற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மாணவர்கள் ...