அங்கன்வாடி மையங்கள் திறப்பு எப்போது..? அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு...

செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும்

அங்கன்வாடி மையங்கள் திறப்பு எப்போது..? அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு...

செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் படி, அங்கன்வாடி பணியாளர்கள் அங்கன்வாடி மையத்திற்குள் நுழையும் போது கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும், பணியாளர்கள் கட்டாயம் முக‌கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும், வளாகங்கள், சமயலறை உள்ளிட்டவற்றை தூய்மைபடுத்திய பின் பயன்படுத்த வேண்டும், 2 தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்துவதோடு, தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, குழந்தைகள் உணவு உண்ண அமரும் போது தகுந்த சமூக இடைவெளியுடன் அமர்வதை பணியாளர்கள் உறுதி செய்வதோடு, வழங்கப்படும் குடிநீரை காய்ச்சி வடிக்கட்டிய பின்னரே வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.