சட்டப்பேரவை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?.... இபிஎஸ் ஆவேசம்!!! 

சட்டப்பேரவை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?.... இபிஎஸ் ஆவேசம்!!! 

சட்டப்பேரவை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதால் பேரவையில் அனல்பறக்கும் விவாதம் நடைபெற்றது. 

நிறுத்தப்பட்ட நேரலை:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாக கடலூர் மாவட்டம் சிறுமி பாலியல் கொடுமை தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்து பேசியபோது அவரின் பேச்சு நேரலையாக ஒளிபரப்ப படாமல், முதலமைச்சரின் பதில் மட்டுமே நேரலை செய்வதாக கூறி காலை நேரத்தில் அதிமுக வெளிநடப்பு செய்திருந்தது. அதற்கு பிற்பகலில் பேரவைத்தலைவர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். 

அப்பாவு விளக்கம்:

அதிமுகவின் வெளிநடப்பிற்கு விளக்கமளித்த பேரவைத்தலைவர் அப்பாவு இதுவரை வினாக்கள் – விடைகள் நேரத்தை நேரலையாக ஒளிபரப்பினோம் எனவும் முதலமைச்சரின் அறிவுறுத்தலை ஏற்று நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்தையும் நேரலை செய்ய உள்ளோம் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையின் படி அனைத்து நிகழ்வுகளும் படிப்படியாக நேரலை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அதிமுக கொறடா கேள்வி:

மக்கள் பிரச்சினையை பேசும் எதிர்க்கட்சித்தலைவர் உரையை மட்டும் திட்டமிட்டு நேரலையை துண்டிப்பது ஏன்? எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பேரவைத்தலைவர் அப்பாவு எதிர்க்கட்சித்தலைவர் பேசுவது அவசியமானது எனவும் படிப்படியாக அனைத்தும் நேரலை செய்யப்படும் எனவும் பதிலளித்தார். 

கேள்விகளும் பதில்களும்:

அதிமுக பிரதான எதிர்க்கட்சி எனவும் நான் பேசுவதை ஏன் நேரலை செய்வதில்லை எனவும் நேரலை செய்வதில் என்ன பிரச்னை எனவும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பேரவைத்தலைவர் அப்பாவு உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும் வெளிப்படையாக சொல்லவும் விரும்பவில்லை எனவும் கூறினார்.

மேலும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டு போக வேண்டும் அதானே எனவும் ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம் இருக்க கூடாது எனவும் கூறினார் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்.

அதற்கு பேரவைத்தலைவர் அப்பாவு, ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம் என இல்லை எனவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை கேட்பது ஆளுங்கட்சி எதிர்க்கட்சிக்குமான பிரச்னை எனவும் தெரிவித்தார்.

Junior Vikatan - 15 May 2022 - சட்டசபை பிட்ஸ்... | Tamil Nadu assembly  meeting activities - Vikatan

மேலும் பேரவைத்தலைவர் கேரளா, ஒடிஷா, உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட்டு அதன்படி நேரலை ஒளிபரப்புகிறோம் எனவும் வினாக்கள் விடைகள் நேரத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களின் பேச்சையும் நேரலையாக ஒளிபரப்புகிறோம் எனவும் கூறினார்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் பேச்சை கேட்டு செயல்படுகிறீர்கள் எனவும் பேரவை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா ? முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ளதா ? எனவும் கேள்வியெழுப்பினார். 

அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர், சட்டப்பேரவை என் கட்டுப்பாட்டில் தான் உள்ளது எனவும் கடந்த காலங்களில் என்ன நடைமுறை இருக்கிறதோ அதே நடைமுறை தான் தற்போதும் பின்பற்றப்படுகிறது எனவும் பதில் கூறினார்.

இதையும் படிக்க:   வட மாநில தொழிலாளர்கள் வதந்தி... ஜாமீன் மனு விசாரணை!!