” யார் யாருக்கு உரிமைத் தொகை கிடையாது” - உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதிகள் அறிவிப்பு.

” யார் யாருக்கு உரிமைத் தொகை கிடையாது” -  உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதிகள்  அறிவிப்பு.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
அதன்படி 5 ஏக்கர் நிலம் உள்ள குடும்பத் தலைவிகளுக்கும்,  வருமான வரி செலுத்துவோர் மற்றும் தொழில்வரி செலுத்துவோர்களுக்கும்  மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது. 

சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம்  2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும்  மேல் உள்ள பெண்களுக்கு உரிமை தொகை  வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் எம்.எல்.ஏக்கள்., எம். பி.க்கள் மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது  என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க    | 1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு ..!