சத்தீஸ்கர் சட்டப்பேரவையை சோனியா காந்தி திறந்தது குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்....?

சத்தீஸ்கர் சட்டப்பேரவையை சோனியா காந்தி திறந்தது குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்....?

குடியரசுத் தலைவர் ஏன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கவில்லை என்று கேள்வி எழுப்புபவர்கள் சத்தீஸ்கர் சட்டப்பேரவை கட்டிடத்தை சட்டப்பேரவை தலைவரான ஆளுநரை வைத்து திறக்காமல் சோனியா காந்தியை வைத்து திறந்து வைத்தது குறித்து ஏன் கேள்வி கேட்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியா விடுதலை பெற்ற போது திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோர்  செய்தியாளர்களை  சந்தித்தனர். 

அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,   புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதினங்கள் இந்த செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடன் வழங்க உள்ளதாக தெரிவித்தார். நீதி , நியாயம், சமத்துவ ஆட்சிக்கான ஆசிர்வாதிக்கப்பட்ட அந்த  செங்கோல்  நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையின் அருகே வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், செங்கோல் நமது நாட்டின் கலாசார அடையாளம் என்பதால் அது பிற மதத்தினருக்கு  மனக்குறையை ஏற்படுத்தாது என்றும்  அரசியல் ரீதியாக கேள்வி எழுப்ப மட்டுமே இதுபோன்ற விசயங்கள்  உதவும் என்றும் கூறினார்.

 இதையும் படிக்க    | புதிய பாராளுமன்ற கட்டிடம் இந்தியாவின் அடையாளத்தை உலக அளவில் உயர்த்தும் - ஜி.கே.வாசன்

பின்னர் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா மாநில புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை முதலமைச்சர் தான் திறந்து வைத்ததாகவும் ஆளுநர் என்ற முறையில் தனக்கு அழைப்பு கூட விடுக்கவில்லை என்று கூறினார்.

மேலும், குடியரசுத் தலைவர் ஏன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கவில்லை என்று கேள்வி எழுப்புபவர்கள் சத்தீஸ்கர் சட்டப்பேரவை கட்டிடத்தை சட்டப்பேரவை தலைவரான ஆளுநரை வைத்து திறக்காமல் சோனியா காந்தியை வைத்து திறந்து வைத்தது குறித்து ஏன் கேள்வி கேட்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். 

 இதையும் படிக்க    | எல்லை தாண்டும் அமுல் நிறுவனம்..! அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்..!