” எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாயில் நினைவு சின்னம் ஏன்..? ’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி.

” எழுதாத பேனாவுக்கு  81 கோடி ரூபாயில் நினைவு சின்னம் ஏன்..? ’ - எடப்பாடி பழனிசாமி கேள்வி.

தமிழ்நாட்டில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்ந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

சேலம் மாவட்டம் சூரப்பள்ளி பகுதியில் அதிமுக கொடியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்போது, அம்மா மினி கிளிக்குகளை  திமுக அரசு மூடிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி  வழங்கும் திட்டத்தையும் திமுக அரசு கைவிட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சியை திமுக அரசு மேற்கொள்ளவில்லை எனவும், எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாயில் நினைவு சின்னம் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் முயற்சிக்கிறார் எனவும் வினவினார்.

மேலும், தமிழ்நாட்டை காப்பற்ற முடியாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.  

இதையும் படிக்க    | "மதுரை -தூத்துக்குடி தொழிற்பாதை அமைவதற்கு முக்கிய காரணம் கருமுத்து கண்ணன்" தங்கம் தென்னரசு புகழாரம்!