பெண் உரிமை போராளி நர்கேஸ் முகமதி!

ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக போராடிவரும் நர்கேஸ் முகமதிக்கு  2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்களின் உரிமைகளுக்காகவும், ஈரானில் உள்ள கொடூரமான தண்டனைகளை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவரும், தொடர்ந்து போராடியும் வருபவர்தான் இந்த நர்கேஸ் முகமதி. அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது கூட ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறைவாசத்தில்தான் இருக்கிறார் இந்த புரட்சி பெண். 

ஈரானை பொருத்தவரை 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சட்டத்தை அந்த நாட்டு அரசு நடைமுறை படுத்தியுள்ளது அவ்வாறு பெண்கள் அணியும் ஆடை விதத்தை கண்காணிக்க "காஸ்த் எர்ஷாத்"  என்ற சிறப்பு பிரிவு போலீசார் பொது இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளனர். போலீஸ் காவலில் இருந்து சில நாட்களில் வெளியே வந்த அவர் திடீரென உயிரிழந்தார். இதனைக் கண்டித்து ஈரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது சிறையில் இருந்தபடியே அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டியவர் தான் இந்த நர்கேஷ் முகமதி.

பெண்களின் உரிமைகளுக்காகவும் ஈரானில் உள்ள கொடூரமான மரண தண்டனைகளை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நர்கேஷ் முகமதி தற்போது டெஹரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் ஏற்கனவே 13 முறை கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். அதோடு ஈரான் நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் கசையடி தண்டனைகளை அந்த நாட்டு பெண்களுக்காக 154 முறை பெற்று இருக்கிறார் இந்த போராளி.

சிறையில் இருந்தபடியே பல போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டி வருவதால் டெஹரானின் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நர்கேஸ் முகமது அவருக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்கவும் பார்வையாளர்களை சந்திக்கவும் கூட தடை விதித்துள்ளது ஈரான் அரசு.

பெண்களின் உரிமைகளுக்காக போராடிவரும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு குறித்து சிறையில் இருந்தபடியே அறிக்கை வெளியிட்டுள்ள முகமது இந்த அங்கீகாரம் தன்னை மேலும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பணிபுரிய தூண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆசிய விளையாட்டில் பதக்கத்தில் சதமடித்த இந்தியா...!