உயிரை பணயம் வைக்கும் செல்ஃபி மோகம்... கண்காணிப்பை தீவிரப்படுத்தக் கோரிக்கை...

பாம்பன் சாலைப் பாலத்தில்  வாகனத்தில் மேல் நின்று செல்ஃபி எடுத்த இளைஞர்.

உயிரை பணயம் வைக்கும் செல்ஃபி மோகம்... கண்காணிப்பை தீவிரப்படுத்தக் கோரிக்கை...

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொரேரனா தளர்வு  அறிவிக்கப்பட்ட காரணத்தால் வருகைதர துவங்கியுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாம்பன் பாலத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி கொண்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி செல்பி மற்றும் புகைப்படங்கள்  எடுத்து வருகின்றனர். 
இதில் ஆகஸ்ட் 30ஆம் தேதி இன்று ஒருவர் செல்பி மோகத்தால் வாகனத்தின் மேல் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் பார்ப்போரை பதற செய்தது.

உயிரை பணையம் வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க பாம்பன் பாலத்தில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் வாகனங்களை பாலத்தில் நிறுத்திக்கொண்டு சுற்றுலா பயணிகள் மேற்கொள்ளும் விபரீத செயல்களை தவிர்க்க  காவல்துறை அதிகாரிகள் பாம்பன் பாலத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும்  ரோந்து பணி மேற்கொண்டால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.