அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை வரவேற்கிறோம்.! பாஜக அறிவிப்பு.! 

 அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை வரவேற்கிறோம்.! பாஜக அறிவிப்பு.! 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழக அரசின் திட்டதை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கலைஞரின் கனவு திட்டமாக போற்றப்பட்டது கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்னும் திட்டம். இந்த திட்டத்துக்காக அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளையும் கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் அதில் பயிற்சியை முடித்துள்ள அர்ச்சகருக்கு இன்னும் பணிகளை ஒதுக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில்  அனைத்து சாதியினரும் அர்ச்சராக பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து திமுக வெற்றிபெற்றதும் இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு 100 நாளுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.மேலும் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக்கப்படுவார் என்று கூறியிருந்தார்.

இந்த திட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு கொடுத்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழக அரசின் திட்டதை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதோடு அந்த காலத்தில் இருந்தே பெண்களும் ஆகம விதிகளை பயின்றுள்ளனர் என்றும், மேல்மருவத்தூர் கோவிலில் பெண்கள் பூஜைகளை நடத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஏற்கனவே, அனைத்து சாதி ஆண்களும், பெண்களும் பூஜைகள் போன்றவற்றை செய்து வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.