"டி கே சிவகுமார்க்கு கண்டனம் எழுப்பவில்லை, ஒரு வார்த்தை கூட சித்திராமையாயிடம் புகார் அளிக்கவில்லை" அண்ணாமலை கேள்வி!

"டி கே சிவகுமார்க்கு கண்டனம் எழுப்பவில்லை, ஒரு வார்த்தை கூட சித்திராமையாயிடம் புகார் அளிக்கவில்லை" அண்ணாமலை கேள்வி!

ஒரு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் அகில இந்திய பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுடன் சந்திப்பிற்கு பிறகு மீண்டும் சென்னை வந்தடைந்தடைந்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் தென்னாப்பிரிக்கா அரசு, பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, மற்றும் சவுத் ஆப்பிரிக்கா நாடுகளைக் கொண்டு பிரிக்ஸ் எனும் கூட்டத்தினை தொடங்குகின்றன. காலம் காலமாக பிரிக்ஸ் கூட்டத்தை நடத்தும் அரசின் ஆளுங்கட்சி பிரிக்ஸ் கூட்டத்தில் இடம்பெறும் நாடுகளின் அரசியல் கட்சிகளை அழைத்து ஒரு அரசியல் கூட்டத்தை நடத்துவார்கள். அந்த அரசியல் கூட்டம் ஜூலை 17 முதல் 23 வரை நடந்த கூட்டத்திற்கு தென்னாபிரிக்காவின் ஆளுங்கட்சி ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸ், இந்தியாவில் பாஜக கட்சியினை அழைத்துள்ளனர். இந்த கூட்டத்திற்காக நான்கு நபர்களை கொண்ட குழு உடன் ஜே பி நட்டா இந்தியாவின் பாஜக கட்சியின் சார்பில் தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளார். அந்த குழுவில் நானும் ஒரு நபர். அந்தக் கூட்டத்தினை தொடர்பாக இன்று ஆலோசித்து கலந்துரையாடினோம். அரசியல் ரீதியாக எதும் பேசவில்லை" என தெரிவித்துள்ளார்.

மேலும், வருகின்ற ஜூலை 28ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் பாஜக கட்சியின் சார்பில் "என் மண் என் மக்கள்" நடைபயணம் ஆரம்பிக்க உள்ளது, நடை பயணத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், கட்சியின் தலைவர்கள் அனைவரும் இதில் இணைந்து பணியாற்றி வருகின்றனர், இந்த பயணத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள டோல் ஃப்ரீ என்னை வெளியிட்டுள்ளோம் இன்று மட்டும் ஒரு லட்சத்து 72 ஆயிரம் நபர்கள் பதிவு செய்துள்ளனர், எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று நடைப்பயணத்தின் நோக்கம் என்பது தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக 2024 தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரவேண்டும் என்பதற்கு ஆகும். மீண்டும் வேண்டும் மோடி 2024 எனும் கோஷத்தின் அடிப்படையில் இந்த நடைபயணம் செயல்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், "எதிர்க்கட்சிகள் மிக ஆற்றொணா (desperate) ஆக இருக்கின்றனர், மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சிக்கு எதிராக இருந்த கட்சிகளில் பல எம்பிகள் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர், ஆகையினால் எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி மக்கள் மத்தியில் நிற்காது என்று. ஆகையினால் திமுக, மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரமும் ஆளுமையும் கொண்டிருப்பது பொய் வேடம் அணிந்து கொள்ள சில உதிரி கட்சிகளை தன்னுடன் இணைத்துக் கொள்கின்றனர். ஒரே கொள்கையின் அடிப்படையில் கட்சிகள் இணைந்தால் மக்கள் ஏற்பார்கள். ஆனால் பிரதமர் மோடியை எதிர்ப்பதற்கு மற்றும் சண்டை போடுவதற்கு மட்டும் கூட்டணியில் இணைந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" எனக் கூறியுள்ளார்.

மேலும் முதலமைச்சர் பெங்களூரு செல்வது குறித்து அவர் பேசிய போது, "பெங்களூருக்கு நம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்று திரும்பும் போது, பாஜக கட்சியினர் மற்றும் தலைவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பினை தெரிவிப்போம். தமிழகம் முழுவதும் கருப்பு பலூனை பாஜக தொண்டர்கள் பறக்க விடுவார்கள். அதற்கு காரணம் மேகதாது அணையின் சரி சமமான தண்ணீர் பிரிப்பினை நம் முதலமைச்சரினால் கேட்டு வாங்க முடியவில்லை. ஒரு வார்த்தை கூட, டி கே சிவகுமார் பற்றி கண்டனம் எழுப்பவில்லை, ஒரு வார்த்தை கூட சித்திராமையாயிடம் புகார் அளிக்கவில்லை, இதிலும் கடந்த பட்ஜெட் தொடரில் சித்த ராமையா மேகதாது அணையை கட்டிய தீருவோம் என கூறியுள்ளார். தமிழகத்தின் தகுதி பெற்ற தண்ணீரை பெரும் வரையும் நம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சித்திராமையா இடமும் டி கே சிவகுமார் இடமும் கண்டனத்தை பதிவு செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் பொது சிவில் சட்டம் பற்றி பேசிய அவர், "இதுவரை பொது சிவில் சட்டத்தின் டிராஃப்ட் யாரிடமும் கையில் இல்லை, பொது சிவில் சட்டத்திற்காக ஒரு நாடாளுமன்ற குழு ஒரு டிராஃப்ட் அமைத்த பின்பு பொது சிவில் சட்டம் என்றால் என்னவென்று நமக்கு தெரியும். மத்திய அரசை பொருத்தவரை பொது சிவில் சட்டத்தின் மூலமாக யாரையும் சிறுமைப்படுத்துவது நோக்கம் கிடையாது. கிறிஸ்தவர்களை பொறுத்தவரை பொது சிவில் சட்டம் வந்தவுடன் கணவன் மட்டுமே கொண்டாடி வந்த சொத்தை கணவனுக்கும் மனைவிக்கும் இருவருக்கும் சரி சமமாக பிரிக்கப்படும்,முதலமைச்சர் உட்பட பலரும் பொது சிவில் சட்டத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்", எனக் கூறியுள்ளார்.

மேலும், வெள்ளை அறிக்கை அளிப்பதற்கு முதலமைச்சரிடம் நேரில் சந்திக்க நேரம் கொடுக்கும் படி கோரிக்கை அளித்துள்ளதாகவும், முதலமைச்சர் நேரம் அளிக்கவில்லை என்றால் நாளை மறுநாள் வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் வெளியிடுவதாகவும், தெரிவித்துள்ளார்.

மேலும், 90 ml வரகூடாது, இப்போது பள்ளி செல்லும் சிறுவர்கள் கையில் பீர் பாட்டில் கையில் கொண்டு செல்கின்றனர். அப்படி இருக்க கூடாது. அது சட்ட ஒழுங்கை கெடுத்துவிடும். அமைச்சர் இதை புரிந்துகொள்ளாமல் கூறுவது தமிழ்நாடு அரசு எவ்வளவு பிற்போக்காக உள்ளது என்பதை குறிக்கிறது. இதற்காக தான் பாஜக வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளது, எனவும் சாடியுள்ளார்.

மேலும், இந்த வெள்ளை அறிக்கைக்கு பல ஐஏஎஸ் அதிகாரிகள் உதவி உள்ளனர் எனவும், அவர்கள் பெயர் கூற விரும்பவில்லை என்றும், முதலமைச்சர் நேரில் சந்திக்க நேரம் தரவில்லை என்றால் கண்டிப்பாக 15 தேதி வெள்ள அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || "உரிமை தொகைக்கான குடும்ப தலைவிகளை அடையாளம் காண சிறப்பு முகாம்கள்" மேயர் பிரியா!