சிதம்பரம் விவகாரம்; 100க்கும் மேற்பட்ட பாஜவினா் கைது!

சிதம்பரம் விவகாரம்; 100க்கும் மேற்பட்ட பாஜவினா் கைது!

கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோயில் கனகசபை விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசாா் கைது செய்துள்ளனர்.

சில தினங்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழா நடப்பதால் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் பதாகை வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக பதாகையை அகற்றினர். பின்னர் தீட்சிதர்கள் கனகசபை மீது பக்தர்களை ஏற்ற அனுமதிக்காததால், போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிக்க: "மணிப்பூர் விவகாரம், திட்டமிடப்பட்ட சதி?", மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்!

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் இந்த செயலை கண்டித்து நேற்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜகவினர் அறிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஆனால் பாஜகவின் கடலூர் மாவட்ட தலைவர் மருதை தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் தடையை மீறி சிதம்பரம் மேலவீதி பெருமாள் கோயில் அருகில் திரண்டனர். 

பின்னர் திடீரென தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்ப தொடங்கினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 100க்கு மேற்பட்ட பாஜகவினைரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரத்திற்கு சிதம்பரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: "ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்", அமைச்சர் சாமிநாதன்!