அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்கக் கூடாது..!

அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர்  மாலை அணிவிக்கக்  கூடாது..!

திண்டிவனம் ரோஷனை பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் பொழுது விசிக, பாஜக இடையே நடந்த  மோதலால்  பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், இதே போன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த விசிக -வினர்  50க்கும் மேற்பட்டோர்  சிலையின் அருகே காத்திருந்தனர். அப்போது பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வந்திருந்தனர். அங்கு கூடியிருந்த விசிக கட்சியினர், பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என கோஷம் எழுப் பி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  இதனைத் தொடர்ந்து பாஜகவினரும் விசிக கட்சியினரும்  போலிஸ் கண்முன்னே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

இதையும் படிக்க;... பிரிந்து சென்ற தலைவர்கள்..! பின்னடைவில் பாஜக...! பெங்களூரு தேர்தலில் இனி நிலை என்ன?

பின்னர் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உரிய நேரம் ஒதுக்கப்படும், அப்போது வந்து மரியாதை செலுத்திக்கொள்ளுங்கள் என சமரசம் செய்து அனுப் பிவைத்தனர். பின்பு போலீசாரின் நீண்ட நேரப்  பேச்சுவார்த்தைக்கு பின்பு பாஜகவினர் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து கிளம் பிச்  சென்றனர்.

இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக  திண்டிவனம் டி.எஸ். பி. சுரேஷ் பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:... ஜாலியா போகலாம்.....‘ஜாய் ரைடு '....! உதகையில் மலை இரயில் சேவை தொடக்கம்...!