நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிகவரித் துறையினர் ஆய்வு!

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிகவரித் துறையினர் ஆய்வு!

மதுரை மாநகர் பகுதியில் நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகங்களில் வணிகவரித்துறையினர் சோதனை - உணவகங்களுக்கு வாங்கப்பட்ட பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் சோதனை நேற்றைய பொழுது நடைபெற்றுள்ளது

உணவகத்தில் சோதனை

தமிழகத் திரைப்படத்தின் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வரும் சூரி தான் சம்பாதித்தும் பெரும் பணங்களில் ஒரு பகுதியை தமிழகம் எங்கும் உணவகங்கள் திறந்து நடத்தி வைத்து வருகிறார்.இதனை அடுத்து மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் உள்ளது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலுமஒரு உணவகம் செயல்பட்டு வருகிறது.

ஆவணங்கள் குறித்து விசாரணை

இந்த நிலையில் தான் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள வணிகவரித் துறையினர் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வாங்கிய உணவுப் பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்கிற அடிப்படையில் சோதனை நடைபெற்றது. இன்னும் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையிலே இந்த சோதனை நடைபெற்றதாகவும் இறுதி அறிவிப்பு பின்னர் வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.