மாஸ்க் -கு முக்கியம் பிகிலு..! கொரோனா கம்மிங் பேக் ......!

மாஸ்க் -கு  முக்கியம் பிகிலு..!  கொரோனா  கம்மிங்  பேக் ......!

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என 
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுஉள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தினசரி கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், பொதுமக்கள் முக கவசம் அணிவது,  சமூக இடைவெளிகள் கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசு விதிமுறைகளைக்  கடைப்பிடிக்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாள்தோறும் இருபதிற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், மாவட்டம்  முழுவதும் 82 நபர்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் மருத்துவமனைகளில் காய்ச்சல் இரும்பல் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | என்னது...? கூடவே வந்த நிழல காணோமா..? கொடைக்கானலில் ஆச்சர்ய நிகழ்வு...!

இதனைத்  தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக  பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என்றும்,  கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினிகளை கொண்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும், மேலும் காய்ச்சல் உடல் வலி தொண்டை வலி இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

 இதையும் படிக்க | விருதுநகர் மக்களே வெளியில் போகாதீங்க