ஒன்றிய அரசு மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!கூட்டணியிலிருந்து விலகுகிறதா அதிமுக?

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த 21 கிராமங்களை சார்ந்தவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி இழப்பீடு இன்று வரை நிறைவேற்றவில்லை

ஒன்றிய அரசு மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!கூட்டணியிலிருந்து விலகுகிறதா அதிமுக?

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த 21 கிராமங்களை சார்ந்தவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி இழப்பீடு இன்று வரை நிறைவேற்றவில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வேலை வழங்க வேண்டும் என்று கூறினார். தமிழ்நாட்டு மக்களை மத்திய அரசு இதில் வஞ்சித்து கொண்டிருக்கிறது.நெய்வேலியில் தேர்வு செய்யப்பட்ட 300 பொறியாளர்கள் தேர்வு செய்யபட்டதில் ஒருவர் கூட தமிழர் இல்லை இது குறித்து மாநில அரசு 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு குரல் கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

தமிழ்நாடு அரசு குழு அமைக்கவில்லை

மக்களை ஏமாற்றும் வேலையை விட்டு விட்டு ஸ்டாலின் அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும் இதற்காக குழு அமைப்பதாக கூறிய மாநில அரசு இதுவரை குழு அமைக்கவில்லை என தெரிவித்துள்ளார். நிலம் கொடுத்தவர்களுக்கு 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேலை வாய்ப்பினை நெய்வேலி என் .ல்.சி நிர்வாகம் வழங்கவில்லை.கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கவலைப்படாமல் நடிகை நயந்தாரா சட்டப்படி குழந்தை பெற்றாரா என்பது குறித்து தமிழக அரசு கவலைபடுகிறது என சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார்.