மாணவர்களுக்கு புத்தக பை, காலணி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

மாணவர்களுக்கு புத்தக பை, காலணி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தஞ்சையில் உள்ள அரசர் உயர்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. நிகழ்வில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டுஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர். தஞ்சை நகரத்தில உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பன்னிகளில் படிக்கும் 2488 மாணவ, மாணவிகளுக்கு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார். புத்தகப் பை டிசம்பர் மாதம் இறுதிக்குள்ளும், காலணி நவம்பர் மாதம் முதல் வாரத்திற்குள்ளும் வழங்கப்படும் என்றார்.

அடுத்த ஆண்டு பள்ளிகள் திறந்தவுடன் ஜூன் மாதம் இறுதிக்குள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2381 அங்கன்வாடி பள்ளிகளில் 54381 பேர் எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். தற்போதுள்ள ஆசிரியர்களை வைத்து சிறப்பாக வகுப்புகள் செயல்படுகிறது என அமைச்சர் அன்பில், மகேஷ் தெரிவித்தார். நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.