குட்டி யானையை பத்திரமாக அழைத்து செல்லும் யானை கூட்டம் - வைரல் வீடியோ  

பிறந்து சில தினங்களே ஆன யானை குட்டியை  சாலையில் அரவணைத்து கூட்டி வரும் யானை கூட்டத்தின் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

குட்டி யானையை பத்திரமாக அழைத்து செல்லும் யானை கூட்டம் - வைரல் வீடியோ   

பிறந்து சில தினங்களே ஆன யானை குட்டியை  சாலையில் அரவணைத்து கூட்டி வரும் யானை கூட்டத்தின் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்கு உட்பட்ட மாயார் சாலையில் யானை கூட்டம் ஒன்று பிறந்து சில தினங்களே ஆன குட்டி யானையை அரவணைத்து சாலையில் கூட்டி வருகிறது. யானை குட்டிக்கு பள்ளங்களில் ஏறி இறங்க முடியாத காரணத்தால் நீண்ட தூரம் சாலையிலேயே நடக்க வைத்து யானை கூட்டம் கூட்டி வருகிறது.

சாலையில் அதிகமான வாகனங்கள் சென்று வந்த காரணத்தால் குட்டியை கூட்டத்தில் இருக்கும் யானைகள் பாதுகாப்பாக தங்களுக்குள்ளே மறைத்து சாலையிலேயே அழைத்து வந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.