திருச்சியில் மீன்பிடி திருவிழா கோலாகலம்...! உற்சாகத்தில் மக்கள்...!

திருச்சியில் மீன்பிடி திருவிழா கோலாகலம்...!  உற்சாகத்தில் மக்கள்...!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த  திருத்தலையூர் ஏரியானது சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் நீர்ப்பாசனத்தை நம்பி இப்பகுதியில் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் ஏரி நிரம்பி வழிந்தது. இதை அடுத்து தற்போது தண்ணீர் குறைந்ததன் காரணமாக இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இதையும் படிக்க:.. மாணவர்களின் தேவைக்கேற்ப கல்லூரிகளில் அமைப்பதற்கு.... அமைச்சர் பொன்முடி!!

இந்த மீன்பிடித் திருவிழாவில் திருத்தலையூரை சுற்றி உள்ள கிராமங்களான கண்ணனூர், கட்டணம்பட்டி, பெத்துப்பட்டி, பகளவாடி, ஆதனூர் உள்ளிட்ட 25 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 இதையும் படிக்க;... 50 வருடங்களாக வசித்து வரும் வீடுகளை இடிக்கும் பணி.... எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்!!

 மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனர் மீன்களின் அளவு குறைவாக இருந்ததால் மீன்பிடிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். கெண்டைமீன், கெளுத்தி மீன் ,அயிரை மீன்  உள்ளிட்ட பல வகையான மீன்களை பிடித்துச் சென்றனர்.