மீனவர்களுக்கு 400 லிட்டர் டீசல்... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் பேட்டி...

மீனவர்களுக்கு 400 லிட்டர் டீசல் வழங்கப்படும்  என்று  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு 400 லிட்டர் டீசல்... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் பேட்டி...

மீனவர்களுக்கு 400 லிட்டர் டீசல் விரைவில் வழங்கப்படும் என கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் பொட்டிதட்டி கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமினை கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

மீனவர்களுக்கு சிறிய ரக படகுகளுக்கு மாதந்தோறும் 300 லிட்டர் டீசலும், பெரிய ரக படகுகளுக்கு 1,800 லிட்டர் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் 300 லிட்டர் டீசல் 400 லிட்டர் டீசலாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அறிவிப்பினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க உள்ளார்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் டீசல் விலை நிர்ணயம் செய்து மீனவர்களுக்கு மானிய விலையில் கூடுதலாக டீசல் வழங்கப்படும் எனக் கூறினார்.