மாணவர்களை ஏமாற்றும் விடியல் அரசு - ஈ.பி.எஸ் கடும் விமர்சனம்

தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசு இப்போதாவது மாணவச் செல்வங்களை ஏமாற்றுவதை நிறுத்துமா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களை ஏமாற்றும் விடியல் அரசு - ஈ.பி.எஸ்  கடும் விமர்சனம்

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து தான் என தெரிவித்திருந்த திமுகவின் தற்போதைய நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர்,சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது பேசும்போதுகூட, நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா என்று தான் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் நேரடியாக எந்த பதிலும் தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆராய மட்டுமே நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு, நீட் தேர்வை ரத்து செய்ய அமைக்கப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும். ,நீட் தேர்வு முதல், தமிழகத்தை பாதிக்கும் எந்தவித பிரச்னையானாலும் அதிமுக மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி நீட் ஒழிந்து விடும் என்று தேர்விற்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், நீட் தேர்வு தேதி அறிவிப்பு தலையில் இடியை போல் இறங்கியுள்ளதாகவும், மாணவர்களும், பெற்றோர்களும் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவே, தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுவதாக திமுக அர என சுகாதாரத்துறை அமைச்சர் பேசியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து, திமுக ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.