"மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் இரட்டை வேடம்", பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

"மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் இரட்டை வேடம்", பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதில் மத்திய அமைச்சரக்ள் உறுதியாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம்  கூறியதாவது, கர்நாடகா காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்ற பிரச்சனையை கர்நாடக  தான் கிளப்பியது. தேர்தல் வாக்குறுதியில் மேகதாது அணை கட்டுவோம் எனக் கூறியது காங்கிரஸ். காங்கிரசையோ டிகே.சிவக்குமாரையோ கண்டிக்க ஸ்டாலினுக்கு மனமில்லை. கர்நாடகாவில் நடைபெறும் கூட்டத்திற்கு எப்படி செல்வார் ஸ்டாலின். மேகதாது மூலமாக அதிகமாக பயன்படப்போவது சிவக்குமாரின் தொகுதி, எனக் கூறியுள்ளார்.

மேலும், முல்லை பெரியாரிலும் நம் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.  காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து பாஜக அரசு தான். ஆனால் மேகதாதுவில் அணை கட்ட வேண்டுமென்று இல்லாத பிரச்சனையை கிளப்பியது காங்கிரஸ் தான். பாஜக அதை கண்டித்தது. கீழே இருக்கும் மாநிலங்களின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்பதை பா.ஜ்.க மத்திய அமைச்சர்கள் தெளிவாக கூறியுள்ளனர், எனக் கூறியுள்ளார்.

மேலும், காவிரி விவகாரம் லட்சக்கணக்கான  தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பற்றியது. இந்த சூழலில் தான் நம் முதல்வர் ஸ்டாலின் தன்னை அகில இந்திய தலைவராக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளின் சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு செல்கிறார், என குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு நம் முதல்வர் எப்படி செல்ல முடியும்?  தமிழர்களின் தன்மானத்தை தாரை வார்த்துவிட்டு செல்வாரா? , கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மேலும், கர்நாடகாவிற்கு ஸ்டாலின் செல்லலாம். ஆனால் திரும்பி வந்தால் "Go back stalin " என கருப்பு பலூன் விடுவோம். ஒவ்வொரு வீட்டுக்கு முன் , விமான நிலையத்தில் என அனைத்து இடங்களிலும் கருப்பு பலூனுடன் வீதியில் நிற்போம், என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: நீலகிரி விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!