"என்னுடைய அமைச்சரை நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது" மு.க.ஸ்டாலின்!

"என்னுடைய அமைச்சரை நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது" மு.க.ஸ்டாலின்!

என்னுடைய அமைச்சரை நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது என்று ஆளுநர் ஆர்,என்.ரவிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி உத்தரவிட்ட ஆளுநரின் கடிதத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகே ஒருவர் அமைச்சர் பதவியை இழப்பார் என்றும் செந்தில்பாலாஜி மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் தாக்கல் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஒருவர் அமைச்சராக நீடிப்பதா வேண்டாமா என்பதை பிரதமரோ அல்லது முதலமைச்சரோ தான் முடிவு செய்ய வேண்டும் என்ற  உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள முதலமைச்சர், அரசியல் சாசனத்திற்கு மதிப்பளிக்காமல் ஆளுநர் செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல் கடிதத்தில் டிஸ்மிஸ் செய்வதாக கூறிவிட்டு பின்னர் நிறுத்தி வைத்திருப்பதன் மூலம் அவசரகதியாக எடுத்த முடிவைக் காட்டுவதாக கூறியுள்ளார்.

முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியை விட்டு நீக்கி நேற்று இரவு உத்தரவிட்டதும் பின்னர் அந்த முடிவை மாற்றி உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:"அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதலமைச்சர் இருக்கும் இடம் மாறிவிடும்" எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!