தடுப்பூசிக்காக உலகளாவிய ஒப்பந்தம் கோருவது இனி தேவையில்லை.! -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.! 

தடுப்பூசிக்காக உலகளாவிய ஒப்பந்தம் கோருவது இனி தேவையில்லை.! -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.! 

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிசன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 70 மருத்துவர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு,மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் உடல்நிலையை அவர்களின் உறவினர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் டிஜிடல் ஸ்க்ரீன் அமைக்கப்பட்டு உள்ளது என்ற அவர், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2000 மருத்துவர்களுக்கு பணி நியமனம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது ,தற்போது வரை 1485 மருத்துவர்களுக்கு நேரடியாக பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டு உள்ளது என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடைபெறும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும் இதுபோன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு அதிகமாக கட்டணம் வசூலித்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வரும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார் 

தொடர்ந்து பேசிய அவர் 18 வயது முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி வாங்குவதற்கு தமிழக அரசு சார்பாக தற்போது வரை 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது என்றும் அதற்காக நமக்கு  ஒன்றிய அரசு சார்பாக 16 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டியது உள்ளது என்றும், 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக ஒன்றிய அரசே தடுப்பூசி வழங்க உள்ளதால் இரண்டாவது முறையாக உலகளாவிய ஒப்பந்தம் கோருவதற்கு  தேவையில்லை என்று தெரிவித்தார்.