மதுக்கடைகளை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்!

மதுக்கடைகளை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர்  மனு அளித்தனர்!

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதி புண்ணிய தலமாகவும் சுற்றுலா தலமாகவும் உள்ளது மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் ராமேஸ்வரம் நகராட்சி தங்கச்சிமடம் பாம்பன் ஊராட்சிகள் உள்ளன.  பாம்பன் ஊராட்சியில் ரயில் நிலையம், பஸ் நிலையம் அருகே மூன்று மதுபான கடைகள் உள்ளது.

தினமும் அதிகமாக மது குடித்துவிட்டு பலர் நிர்வாணமாக விழுந்து கிடக்கின்றனர்.  மேலும் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் மதுக்கடைகள் இல்லாததால் அங்குள்ளவர்களும் இங்கு வந்து குடிக்கின்றனர்.   மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பாம்பன் பகுதியில் குடித்துவிட்டு தகராறு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் மதுக்கடைகளை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.  முன்னதாக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் இருந்து மது பாட்டில்களை மாலையாக கழுத்தில் மாட்டிக் கொண்டு மதுக்கடையை மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தியும் ஊர்வலமாக ஆட்சி அலுவலகம் சென்று  ஆட்சியரிடம் மனு அளித்தனர்.