ஓசோன் தினம்...மாணவர்கள் பேரணி!

நெல்லையில் அரசு அருங்காட்சியகம் மற்றும் சதக்கத்துல்லா தனியார் கல்லூரியின் விலங்கியல் துறை இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது.

ஓசோன் தினம்...மாணவர்கள் பேரணி!

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நெல்லையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஓசோன் தினம்

உலக ஓசோன் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் அரசு அருங்காட்சியகம் மற்றும் சதக்கத்துல்லா தனியார் கல்லூரியின் விலங்கியல் துறை இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது. பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் தொடங்கி தபால் நிலையம் வழியாக அரசு அருங்காட்சியகம் வரை இந்த பேரணி நடைபெற்றது.

மாணவர் பேரணி

இதில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியின்போது உலகம் வெப்பமயமாதலை தடுப்பது குறித்தும் தொழிற்சாலை மாசுக்களால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் பேரணியாக சென்றனர்.