தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது... சுற்றிவளைத்து தூக்கிய தனிப்படை போலீசார்!

தருமபுரியில் பதுங்கியிருந்த யூடியூப் மதனை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது... சுற்றிவளைத்து தூக்கிய தனிப்படை போலீசார்!

தருமபுரியில் பதுங்கியிருந்த யுடியூப் மதனை போலீசார் கைது செய்தனர்.

பப்ஜி என்ற தடைசெய்யப்பட்ட விளையாட்டில் வெல்வது எப்படி என்பது தொடர்பாக யூ-டியூப்பில் அடிக்கடி வீடியோ வெளியிடுபர் மதன். இதன் காரணமாக 'பப்ஜி மதன்' என்றே அழைக்கப்பட்டார். முதலில் பப்ஜி விளையாட்டின் நுணுக்கங்களை பற்றி கூறிய இவர், பிறகு  தன்னோடு விளையாகும் சக பெண்களை காதால் கேட்க முடியாத அளவு கொச்சையாகவும், பாலியல் ரீதியாகவும் பேசி வந்தார். அவரின் இந்த பேச்சை ரசித்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

அப்படி பின்தொடர்பவர்களிடமிருந்து அவர் குறிப்பிட்ட அளவு தொகையையும் வசூலித்திருக்கிறார். அவரது பேச்சிக்காகவும், அவரது பாலியல் சீண்டல்களுக்காகவும் அவர் மேல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் தலைமறைவானார். அதன் பின் அவரது  யூ-டியூப் பக்கத்தை நிர்வகித்து வந்ததற்காக அவரது மனைவி கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கடந்த 3, 4 நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடிவந்தனர். 

இந்த நிலையில், யூடியூபில் ஆபாசமாக ஆடியோவை வெளியிட்ட மதன் தருமபுரியில் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து மதனை கைது செய்துள்ளனர்.