காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி வழங்கி  ஊரக  உள்ளாட்சித்துறை அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி...

உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.கிராம சபை முடிந்தவரை திறந்த இடங்களில் நடத்தப்பட வேண்டும்.கிராம சபை நடத்துவதற்கு முன், இடத்தை முழுமையாக சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம சபை தொடங்குவதற்கு முன்,  வெப்பமானியைப் பயன்படுத்தி முழுமையாகச் பரிசோதிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கிடையேயான குறைந்தபட்ச 6 அடி அளவுக்கு சமூக இடைவெளி கடைபிடிக்க  வேண்டும் என குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, கூட்டத்தில்  பங்கேற்கும் அனைவரும்  கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும்,  கிராம சபை கூட்டத்தை காலை 10மணிக்கு தொடங்கி பிற்பகல் 1மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பஞ்சாயத்து இன்ஸ்பெக்டரின் எழுத்துப்பூர்வ அனுமதியின் பின்னரே இந்த விதிமுறையைப் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ள தமிழக அரசு,விழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.