தக்காளி விலை குறைவு!!

தக்காளி விலை குறைவு!!

தக்காளி விலை உயர்ந்திருந்த நிலையில், தற்போது மொத்த விலை மற்றும் சில்லறை விலை கடைகளில் இன்று 10ரூ குறைந்துள்ளது. 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவு காரணமாக கடந்த மூன்று நாட்களில் 50 ரூபாய் விலை உயர்ந்திருந்தது. ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், தக்காளி இன்று  10 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று மொத்த விற்பனையில் தக்காளி கிலோ அதிகபட்சமாக 110 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று  10 ரூபாய் விலை குறைந்து நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்ட விலையான 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 10 குறைந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று தக்காளி வரத்து 400 டன் என்ற அளவில் இருந்த நிலையில் இன்று கூடுதலாக 50 டன் வந்ததால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.