மதுபோதையில் பேரிகார்டுகள் மீது மோதி ரகளை,. கைது செய்த காவல்துறை,..ஆட்டோவில் தப்பித்த தொழிலதிபர்.!  

மதுபோதையில் பேரிகார்டுகள் மீது மோதி ரகளை,. கைது செய்த காவல்துறை,..ஆட்டோவில் தப்பித்த தொழிலதிபர்.!  

கோட்டூர்புரம் சர்தார் படேல் சாலை கேன்சர் மருத்துவமனை அருகே நேற்று இரவு 8 மணியளவில் அதிவேகமாக சொகுசு காரான பி.எம்.டபிள்யூ கார் ஒன்று சென்றுள்ளது. 

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் காரை நிறுத்தக் கூறியும் கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால்  செல்வகுமார் தலைமையிலான போலீசார் சொகுசு காரை, காவல் வாகனத்தில் துரத்தி உள்ளனர். அப்போது சரியாக மத்திய கைலாஷ் சிக்னல் அருகே காவலர்கள், அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ சொகுசு காரை காவல் வாகனத்தை குறுக்கே நிறுத்தி தடுத்து நிறுத்தினர். 

போலீசார் சொகுசு காரை தடுத்து நிறுத்திய போதும், சொகுசு காரை ஓட்டி வந்த நபர் தப்பிச் செல்வதற்காக சாலையின் ஓரத்தில் இருந்த பேரிகார்டர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.

பின்னர் போலீசார் காரை மடக்கி பிடித்து விசாரணையில் இறங்கினர். சொகுசு காரை ஓட்டி வந்த நபர் அளவுக்கதிகமான மது போதையில் இருந்ததால் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான பதிலளித்தார். இதனால் சொகுசு காரையும், காரை ஓட்டி வந்த நபரையும் கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

விசாரணையில் அளவுக்கு அதிகமான மது போதையில் பிஎம்டபிள்யூ சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி வந்த நபர் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரீஷ் டி ஜேத்வானி (55) என்பது தெரியவந்தது. மேலும் இவர் தொழிலதிபர் என்பதும், EURO Star நிறுவனத்தின் சேர்மன் என்பதும் தெரியவந்தது.


இதனையடுத்து அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்தத அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று மதுபோதையில் ஓட்டியதற்காக சோதனை செய்தனர்.  இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து ஆட்டோ மூலம் ஹரேஷ் ஜெத்வானி தப்பி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் துரைபாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. இதனால் தலைமறைவான அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.