பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா திமுக மற்றும் அதிமுகவினர் மோதல்!

மேடையில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்ற  பள்ளி ஆசிரியர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் பெயரை குறிப்பிடாமல் முன்னதாக மாவட்ட கவுன்சிலர் பெயரை கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா திமுக மற்றும் அதிமுகவினர் மோதல்!

ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா இன்று பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலவச சைக்கிள்

இந்த விழாவிற்கு தலைமை தாங்க ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஏற்காடு ஊராட்சி மற்ற தலைவர் சிவசக்தி  மற்றும் திமுக வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் புஸ்பராணி மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . இலவச சைக்கிளுக்காக 43 மாணவ மாணவிகள் காத்திருந்தனர்.

மாணவர்கள் காத்திருப்பு

இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக இரு தரப்பினரும் விழாவிற்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது யார் சைக்கிள் வழங்குவது என வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மேடையில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்ற  பள்ளி ஆசிரியர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் பெயரை குறிப்பிடாமல் முன்னதாக மாவட்ட கவுன்சிலர் பெயரை கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சைக்கிள் வழங்கப்படாததால் மாணவ மாணவிகள் வெகு நேரம் வெயிலில் காத்திருந்தனர். ‌

திமுக – அதிமுக மோதல்

இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தரப்பினர்  சட்டமன்ற உறுப்பினரை  அவமானப்படுத்தும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த திமுகவினர் அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்து பள்ளி குழந்தைகளை வெகு நேரம் காக்க வைக்க வேண்டாம் என்று கூறி உடனடியாக அங்கு காத்திருந்த  மாணவர்களை அழைத்து சைக்கிளை கொடுத்து விட்டு அங்கிருந்து கலந்து சென்று விட்டார் .

இதனைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வர்கள் தாங்கள் இல்லாமலேயே விழாவை நடத்தி இருக்கலாம் எனவும். தங்களுக்கு அழைப்பு விடுத்து அவமானப்படுத்திய தாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினர் மோதல்  காரணமாக பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.