தமிழ்நாட்டிற்கு தனி சுங்க கட்டணமா?

தமிழ்நாட்டிற்கு தனி சுங்க கட்டணமா?

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு கி.மீ பயணத்திற்கான சுங்க கட்டணம் தமிழ்நாட்டில் பிற மாநிலங்களை விட அதிகமாக உள்ளதா என்ற விவரங்களை கேட்டு தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு கேள்வி  எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, தமிழ்நாடு உட்பட தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணங்களே வசூலிக்கப்படுகிறது.  இருப்பினும் சுங்கச்சாவடிகள் தொடர்பான கட்டணங்களில் மாநில அரசுகள் தொடர்ந்து பிரதிநிதித்துவம் செய்கின்றன. வசூலிக்கப்படும் சுங்க வருவாய் மீண்டும் சாலை மேம்பாட்டிற்காகவே வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகின்றன என்று  கூறியுள்ளார்.