அடையார் ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் பிரச்சனை!!!

தாம்பரம் அருகே தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர், அடையார்  ஆற்றில் கலப்பதால் விஷவாயு தாக்கம் நிலை ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

அடையார் ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் பிரச்சனை!!!

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்திற்கு உட்பட்ட  கிஷ்கிந்தா செல்லும் பிரதான சாலையில்  அடையாறு ஆற்றின் கரையின் அருகே  பிரபல பேக்கரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழில்சாலையில்   தயாரிக்கப்படும் உணவு  பொருட்கள் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பேக்கரி கிளைகளும் அனுப்பப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கழிவு நீர் முறையாக அகற்றாமல்,  பைப் மூலம் கழிவுநீரை அடையாற்றுக்கு செல்லும் கால்வாய்களில் விடுகின்றனர். இதனால் கால்வாய்கள் கலர் மாறியும்,  நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.

மேலும் கழிவுநீர்  வெளியேற்ற படுவதால் அப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாடு விசுவாயு தாக்கும் அளவுக்கு காணப்படுவதால்  பொதுமக்கள் மட்டும் இல்லாமல் வாகன ஓட்டிளுக்கும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | கொத்து கொத்தாக உயிரிழந்த மீன்கள்! கழிவு நீர் கலந்ததால் நடந்த கொடூரம்!!!