"தமிழ்நாடு ஆளுநரின் அதிகாரம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" தமிழிசை நழுவல்!

"தமிழ்நாடு ஆளுநரின் அதிகாரம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" தமிழிசை நழுவல்!

தமிழ்நாடு ஆளுநரின் அதிகாரம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் டாக்டர் மேத்தா மருத்துவமனையின் குழந்தைகள் சிறுநீரகவியல் சிகிச்சை பிரிவு சார்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகளை தொடர்பான மாநாடு 2023 தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்த பின் மேடையில் பேசினார்,  "சிறுநீரகத்துறை மருத்துவரின் மனைவியாக இருப்பது சவாலானது தான். நான் என் கணவருக்கு பல நேரங்களில் டெக்னிக்ஷியனாக இருந்துள்ளேன் அதனால் நானும் பாதி சிறுநீரக மருத்துவர் தான். எனக்கு சிறுநீரகவியல் குறித்து நன்றாக தெரியும். மருத்துவமனைக்கு வருவதற்கு முன் மக்கள் Google சொல்வதை தான் சரி என்று நம்புகிறார்கள். அவர்களுக்கு முழுவதும் தெரிந்து இருந்தால் பரவாயில்லை. ஆனால் பாதி தான் தெரிந்து கொள்கிறார்கள்" என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, ஒருவர் மருத்துவராக இருப்பது சுலபமான காரியம் அல்ல, தனது இன்பங்களை தியாகம் செய்துவிட்டு நோயாளிகளை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

தமழ்நாட்டில் ஆளுநரின் அதிகாரம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக ஆளுநர் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் அவரது அதிகாரம் குறித்து தமிழக ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து தான் இங்கு ஆளுநராக வரவில்லை என குறிப்பிட்ட அவர் மருத்துவராக வந்துள்ளதாகபதிலளித்தார். மேலும், தெலுங்கானா பிரச்சனை குறித்து உங்களுக்கு தெரியும் எனக் கூறிய அவர், புதுவையில் எந்த பிரச்சனையும் இல்லை இல்லாத நிலையில் பிரச்சினை குறித்து என்ன சொல்வது என்று தெரிவித்தார்.

முன்னதாக நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர், அண்ணாமலை தமிழக ஆளுநர் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அகிலேஷ் யாதவ் பிறந்தநாள்; தக்காளி வடிவ கேக் வெட்டி கொண்டாட்டம்!