இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடி…எட்டு இடங்களில் போலீசார் சோதனை!

பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடி…எட்டு இடங்களில் போலீசார் சோதனை!

முன்னாள் ராணுவத்தினர் உட்பட பொதுமக்களிடம் சேமிப்பு பணத்திற்கு இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஓசூர் ரயில்வே நிலையம் அருகில் ஏகே ஸ்டாக் ட்ரேடர்ஸ் நிறுவனத்தில் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருளாதார குற்றப்பிரிவினர் விசாரணை

பங்குச் சந்தை வணிக நிறுவன உரிமையாளர் தலைமறைவான நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், செட்டிப்பள்ளி, தண்டே குப்பம், பெருகோபணப்பள்ளி, கிருஷ்ணகிரி ஹவுசிங் போர்டு, ஓசூர் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி ஆகிய எட்டு இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு  2 டிஎஸ்பிக்கள் 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல கோடி ரூபாய் மோசடி

இதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மோசடியில் ஈடுபட்ட  நிறுவன உரிமையாளர் மீது போச்சம்பள்ளியை சேர்ந்த சுதாகர் என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓசூரில் நடைபெற்ற சோதனையின்போது அலுவலகத்தின் உள்ளே இருந்த முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து ஏகே ஸ்டாக் ட்ரேடர்ஸ் அலுவலகத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.