கூடுதலாக பேருந்துகள் இயக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல்!

கூடுதலாக பேருந்துகள் இயக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல்!

செய்யாறில் அரசு பேருந்தில் அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்றதால் பேருந்து பாதியில் நிறுத்தம்.

மாணவர்கள் சாலை மறியல்

செய்யாறில் அரசு கலைக்கல்லூரி, அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகிறது. செய்யாறு சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் செய்யார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் செய்யாறிலிருந்து போளூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் சென்றதால் அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓட்ட முடியாமல் செய்யாறு டோல்கேட் அருகே பேருந்து நிறுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதலாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று செய்யாறு டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் செய்யாறு வந்தவாசி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

 கூடுதல் பேருந்து இயக்க உறுதி

 தகவல் அறிந்த செய்யாறு காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டுச் சென்றனர். பின்னர் மாணவர்கள் அதே அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர்.