"சுவாமியே சரணம் ஐயப்பா"....தொடங்கியது கார்த்திகை ; ஐயப்ப பக்தர்கள் உற்சாகம்!!!

"சுவாமியே சரணம் ஐயப்பா"....தொடங்கியது கார்த்திகை ; ஐயப்ப பக்தர்கள் உற்சாகம்!!!

இன்று  முதல் கார்த்திகை மாதம் பிறந்ததால் ஐயப்ப பகதர்கள் மாலை அணிந்து கொண்டு ஒரு மண்டலம் விரதம் இருந்து பய பக்தியுடன் ஐயப்பனை தரிசிக்க உற்சாகத்துடன் உள்ளனர்.

குருசாமி தலைமையில் மாலை அணிவிப்பு : 

அதிகாலை முதலே அருவிகளில் நீராடிவிட்டு பல்வேறு கோவில்களில் குருசாமி தலைமையில்  ஐயப்ப பக்தர்கள் மாலையை அணிந்து கொண்டனர்.மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதத்தை மேற்கொள்வார்கள்.நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தர்களும் மாலை அணிந்து கொண்டனர். அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர்.சென்னையில் உள்ள பல்வேரு ஐய்யப்பன் ஆலயங்களில் ஐயப்ப பக்தர்கள் வந்து மாலையணிந்து கொண்டார்கள். மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள  ஐயப்பன் ஆலயம் மற்றும் கோயில்களிலும் மாலையணிந்து கொண்டு விரதத்தைத் துவக்கினர்.நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தர்களும் குருசாமிகள் தலைமையில் மாலை அணிந்து கொண்டனர்.

ஐயப்ப சீசன் ஸ்டார்ட் :

ஐயப்ப சீசன் தொடங்கியுள்ள நிலையில் அது தொடர்பான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.பக்தர்கள்  விரும்பி வாங்க கூடிய  சந்தன மாலை, ரத்த சந்தனமாலை, ஸ்படிக மாலை, ருத்திராட்ச மாலை, துளசி மாலை, செந்துளசி மாலை என பல  வகையான மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் ஐயப்ப சாமி டாலர்களும் விற்பனைக்கு வந்துள்ளது.தமிழ்நாடு அரசு ஐயப்ப சீசன் தொங்கியுள்ள காரணத்தால் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்  செய்வதற்கு ஏதுவாக  சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது.

கோவில் நடை திறப்பு :

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை முதல் நடை திறக்கப்பட்டு ,பக்தர்கள் 18ஆம் படி வழியாக அனுமதிக்கப்பட்டனர்.இன்று முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று அடுத்த மாதம் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 13ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கார்த்திகை மாத சிறப்பு :

பொதுவாக கார்த்திகை மாதம் என்றாலே அதிகாலையில் நீராடிவிட்டு வீட்டில் விளக்கேற்றும் பழக்கம் உள்ளது, இதனால் வீடு சுபிக்ஷ்மாக இருக்குமென்பது ஐதீகம் .கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மட்டுமில்லாமல் முருகனுக்கும் உகந்த மாதமே.முருக பக்தர்களும் முருகன் கோவில்களுக்கு வேல் குற்றி கொண்டு "அரோகரா, "முருகனுக்கு அரோகரா" என்று கோஷமிடுவர்.ஐயப்பன் கோவில் கேரளாவில் சிறப்பு என்றாலும்  தமிழ்நாட்டு மக்களும்  ஐயப்பனை சிறப்பாக  கொண்டாடி வருகின்றனர்.கார்த்திகை மாதத்தில் சிறப்பு கிர்த்திகை முதல் மூன்று நாட்கள் மாலை நேரங்களில் வீட்டு வாசல்களில் விளக்கேற்றி மக்கள் வழிபடுவர்.கார்த்திகை மாதம் பொதுவாக வீடு கட்டடம் கட்ட , வாஸ்து செய்ய , மற்றும் புது வாகனம் வாங்க சிறந்த மாதமாக குறிப்பிடத்தக்கது.

---ஸ்வாதிஸ்ரீ