இனி காகிதத்திற்கு வேலையில்லை…எல்லாம் கணினிமயம்!

நாகர்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் புதிய ஆயத்த பட்டறை அமைப்பதற்கான பணியை தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இனி காகிதத்திற்கு வேலையில்லை…எல்லாம் கணினிமயம்!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து துறைகளையும் கணினிமயமாக்கப்படும். காகிதம் இல்லா அலுவலகங்கள் செயல்பட துவங்கும் என   அமைச்சர் கூறினார்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் புதிய ஆயத்த பட்டறை அமைப்பதற்கான பணியை தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

காகிதமில்லை…அனைத்தும் கணினிமயம்

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உட்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும்போது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப்படும்.

தற்போது 200க்கும் மேற்பட்ட திட்டங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களில் காகிதம் இல்லா செயல்பாடுகள் முறைப்படுத்தும் அளவில் அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் 35 டன் காகிதம் மிச்சப்படும் என தெரிவித்தார்.