தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் மக்கள் வழிபாடு!

தஞ்சை பெரிய கோவிலில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் வந்தனர்.

தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் மக்கள் வழிபாடு!

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியலை முடித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற்று இருப்பதால் விவசாய பெருங்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை முதலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து அண்டை வீட்டாருடன் இனிப்புகள் பரிமாறி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பு பூசைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் புத்தாடை உடுத்தி குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று தஞ்சை பெரியக் கோவிலில் பெருவுடையாரையும். வராஹி அம்மனையும் தரிசனம் செய்து செல்கின்றனர். தீபாவளியை ஒட்டி வராஹி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வழிபாட்டுப் பொருட்களை கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

தஞ்சை பெரிய கோவிலில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் வந்தனர். இந்த ஆண்டு  சிறப்பாக அமைய வேண்டுமென வழிபாடு செய்தும் தீமைகள் விலகி நன்மைகள் கிடைக்க வேண்டும் என சிறப்பு பூஜைகளும் செய்து வருகின்றனர்.