தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்...திருச்சி சிவா தகவல்!

பெண்களுக்கு இலவச பேருந்து ஏற்படுத்தி ஏழை மக்களின் பெரும் சுமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்...திருச்சி சிவா தகவல்!

இந்தியாவிலேயே அதிகமாக உயர்கல்வி பயில்வது தமிழகத்தில் தான்.மற்ற மாநிலத்தில் 30 சதவீத மாணவர்கள் உயர்கல்வி பயிலும் நிலையில் தமிழகத்தில் 51 சதவீத மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே போரூர் காரம்பாக்கத்தில் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் பொதுக்குழு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக கொள்ளைப் பரப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 

அப்போது பேசிய திருச்சி சிவா, பெண்களுக்கு இலவச பேருந்து ஏற்படுத்தி ஏழை மக்களின் பெரும் சுமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறைத்துள்ளார். 5 அல்லது 6 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஏழை பெண்கள் கூட இதன் மூலம் பயனடைகின்றனர் என்றார். மேலும் மாணவர்களுக்கு இலவச பேருந்து என மாணவர்கள் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியதால் தான் இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

மற்ற மாநிலத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 51 சதவீதமாக உள்ளது.இதற்கு திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் தான் என்றார்.இந்த கூட்டத்தில் 2500 ஏழை,எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.